المدة الزمنية 5:8

ஆச்சர்யமான ஆந்தைகளின் வியக்க வைக்கும் வாழ்க்கை முறை

تم نشره في 2021/06/15

ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும், காதுகளையும், சொண்டையும், மற்றும் facial disk என அழைக்கப்படும், தெளிவாகத் தெரியும், கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது. ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை, அவற்றின் கண்களுக்குச் சில அங்குலங்கள் தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியாதவை. எனினும், அவற்றின் பார்வை, விசேடமாக மங்கலான வெளிச்சத்தில் மிகவும் சிறப்பானது. அவற்றின் தோற்ற ஒற்றுமைக்குப் புறம்பாக, இவை, பாறுகள் மற்றும் ஏனைய இரவிற் திரியும் ஊனுண்ணிகளைவிட, whippoorwills மற்றும் ஏனைய பக்கிகள் அல்லது கேப்ரிமுல்கிபார்மஸ் என்பவற்றுக்கு நெருங்கிய உறவுள்ளவை. ஆந்தைகளின் வலுவான நகங்களும், கூரிய சொண்டும், உண்பதற்குமுன் அவற்றின் இரைகளைத் துண்டுதுண்டாகக் கிழிப்பதற்கு உதவுகின்றன. சத்தத்தை அமுக்கும் தன்மையுள்ள அவற்றின் சிறகுகளும், மங்கலான இறகுகளும், அவை சத்தமின்றியும், காணப்படாமலும் பறப்பதற்கு உதவுகின்றன. உணவின் சமிக்கப்படமுடியாத எலும்புகள், செதில்கள், மற்றும் இறகுகள் போன்றவற்றை, உருண்டை வடிவில் வெளிவிடும் இதன் நடத்தை, இவற்றின் உணவுப் பழக்கம் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றது. உயிரியல் பாடங்களின்போது பகுத்தாய்வதற்கு மாணவர்களுக்கு உதவுவதால், சில நிறுவனங்கள், இந்த உருண்டைகளைச் சேகரித்துப் பாடசாலைகளுக்கு விற்பனை செய்கின்றன. ஆந்தை முட்டைகள் கிட்டத்தட்டக் கோளவடிவம் கொண்டவை. ஆந்தைகள் அவற்றின் வகையைப் பொறுத்து, ஒரு சிலவற்றிலிருந்து பன்னிரண்டு வரையிலான முட்டைகளை இடுகின்றன. இவற்றின் கூடுகள் செம்மையற்றவை, மரங்கள், நிலத்தின் கீழான வளைகள், குகைகள் போன்ற இடங்களில் காணப்படும்.

الفئة

عرض المزيد

تعليقات - 93